சென்னை சி.ஐ.டி. நகரில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை,
தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைத்த முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்ததாக கூறினார்.
தமிழகத்திற்கும் பயன்பெறும் வகையில் புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம் தொடர்பான திட்டங்கள் குறித்து ஆலோசித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் கோதாவரி திட்டம் குறித்தும் முதலமைச்சருடன் பேசியதாககக் கூறிய தமிழிசை சவுந்தரராஜன், மாநிலம் பயன்பெறும் வகையில் ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.