Admin
தமிழ்நாடு

"பாரத தேசத்து பெண்களுக்கும் குறிப்பாக நம் தமிழ்நாட்டைச் சார்ந்த பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்" - தமிழிசை

"இல்லாத ஒரு பிரச்சனை எடுத்து நீங்கள் அதற்கு கூட்டம் போடுவது மட்டும் இல்லாமல் மாற்றமான தலைவர்களையும் அழைப்பதற்கான காரணம் என்ன"? - தமிழிசை

Anbarasan

திராவிட முன்னேற்றக் கழகம் அப்புறப்படுத்த வேண்டும் என்று எங்களுடைய கருத்தை வலிமையாக சொல்லி இருக்கிறார் நடிகர் விஜய் என தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

சென்னை ஆலந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்

பாரத தேசத்து பெண்களுக்கும் குறிப்பாக நம் தமிழ்நாட்டைச் சார்ந்த பெண்கள் அனைவருக்கும் எனது உள்ளம் கணிந்த மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலில் பாரத பிரதமருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நம் தமிழகத்தைச் சார்ந்த வைசாலி அவர்களை தான் தனது இணைய பக்கத்தை பராமரிப்பதற்காக முதன் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்

இன்னும் பல பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள் ஆனால் அதில் அவர் சொன்ன காரணம் ஒரு குடும்பம் ஆண் பிள்ளைக்கும் பெண் பிள்ளைக்கும் சமமான வாய்ப்பை கொடுக்கும் பொழுது பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகள் இருவரும் நல்ல சாதனையாளர்களாக வருவார்கள் ஆக இந்த குடும்பம் சம வாய்ப்பை கொடுத்திருக்கிறது அதனால் அந்த குடும்பத்தின் பெண் பிள்ளையை செஸ் வீராங்கனையை நான் முதலில் தேர்ந்தெடுக்குறேன் என்று சொல்லி இருக்கிறார்கள் அதற்கு பாரத பிரதமருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் வைஷாலிக்கும் என்னுடைய பாராட்டை நான் தெரிவித்துக் கொள்கிறேன்

இதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் தினம் ஒரு கடிதத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்

மக்களை ஏமாற்றுவதற்கும் கலவரப்படுத்துவதற்கும் தினம் தினம் அவசரமாக ஏதோ பிரகடனம் நடைபெறுவது போலவே உடனே மறுசீரமைப்பு வந்தவுடன் எல்லா இடங்களும் குறைந்து விடப் போவதைப் போலவும் அவர்களின் தோல்வியை மறைப்பதற்கு பாலியல் பலாத்காரம் கொலை கொள்ளை அதிகரித்து இருக்கிறது அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் நிறைந்து இருக்கிறது

சிறைக்கு சென்று மீண்டும் சிறைக்குப் போகக் கூடிய அமைச்சர் ஊழல் குற்றச்சாட்டோடு நடமாடிக் கொண்டு இருக்கிறார் இதை எல்லாம் மறைப்பதற்க இன்றைக்கு இல்லாத ஒரு பிரச்சனை எடுத்து நீங்கள் அதற்கு கூட்டம் போடுவது மட்டும் இல்லாமல் மாற்றமான தலைவர்களையும் அழைப்பதற்கான காரணம் என்ன?

மரியாதைக்குரிய உள்துறை அமைச்சர் மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள் தமிழகம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்று சொல்லிய நிலையிலும் மீண்டும் மீண்டும் இல்லாத இந்தியையும் இல்லாத மறு வரையறையையும் வைத்துக்கொண்டு பொது மக்களின் அனேக அடிப்படை தேவைகள் இன்னமும் பூர்த்தி அடையாமல் இருக்கிறது

இன்று அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறார்கள். மருத்துவப் பணியிடங்கள் ஆசிரியர் பணியிடங்கள் இன்னும் காலியாக இருக்கிறது உங்களால் பொங்கல் பரிசு கூட கொடுக்க முடியாத சூழ்நிலையில் இன்றைக்கு அரசாங்கம் இருக்கிறது.

இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு இடையே 8 லட்சம் கோடி ரூபாய் வரை கடன் வாங்கி வைத்துள்ளார்கள்,

இதையெல்லாம் மறைப்பதற்கு இல்லாத ஒரு ஹிந்தியை ஹிந்தியை திணைக்கவில்லை என சொல்லிய பிறகும் ஆனால் ஹிந்தியை திணிக்கிறார்கள் என்று திணித்துக் கொண்டு இருக்கிறார்கள் இதற்கான என்னுடைய வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்

ஸ்டாலின் சொல்லுகிறார் டெல்லிக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம் என்று ராகுல் காந்தியிடமும் சோனியா காந்தியிடமும் கேட்கலாம் ஏன் அங்கு இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டு கொண்டிருக்கும் பொழுது டெல்லிக்கு தானே அடிபணிந்தீர்கள் ஏன் அதை நிறுத்திருக்கலாம் அல்லவா,

இப்பொழுது சொல்கிறீர்களே டங்ஸ்டன் வந்தால் ஒரு நாள் கூட நான் முதல்வராக இருக்க மாட்டேன் என்று தமிழர்கள் கொல்லப்படும் போது ஏன் நீங்கள் சொல்லவில்லை ஏனென்றால் காங்கிரஸ் அதை நடைமுறைப்படுத்தாது

டங்ஸ்டணை அப்புறப்படுத்துவதற்கு பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துவிட்டது ஆக மரியாதைக்குரிய முதலமைச்சர் அவர்கள் இரட்டை வேடம் போட்டு கொண்டு இருக்கிறார்கள்

அண்ணன் சேகர்பாபு நான் காராபிரியாகிவிட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் அதிமுகவில் காலாவதி ஆனபிண் தான் இவர் திமுகவில் வந்து சேர்ந்தார்

நாங்கள் எல்லாம் ஒரே கட்சியில் ஒரே இயக்கத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் முதலமைச்சர் சொல்கிறார் அவருக்கு சிரிப்பாக வருகிறதாம் பரிதவிக்கக்கூடிய பாரதிய ஜனதா கட்சியின் கையெழுத்து இயக்கம்

அப்படி என்றால் எங்களை கையெழுத்து வாங்க விட்டது செல்ல வேண்டியது தானே ஏன் பயந்து போய் காவல்துறையை ஏவி விடுகிறீர்கள் எதற்காக கைது செய்கிறீர்கள் எதற்காக வெயிலில் நிக்க வைத்து பின்னர் மூன்று மணி நேரம் கழித்து அனுமதி கொடுத்தீர்கள்

உங்களுக்கு பயமே இல்லை என்றால் நாங்கள் பாட்டுக்கு கையெழுத்தை வாங்கிக் கொண்டு போய் இருக்கிறோம்

ஆனால் அது அப்படி அல்ல இந்த மும்மொழி கொள்கைக்காக மக்களிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம் மக்களிடம் சென்று கொண்டிருக்கிறது மக்கள் இதை ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள்

நான் கூட கூறினேன் மூன்று மணி நேரம் இதற்கு பின் மக்கள் தொடர்ந்து வந்த கையெழுத்து போட்டார்கள் அதனால் நான் சொல்கிறேன் இந்த கையெழுத்து இறக்கம் மீண்டும் மீண்டும் நான் சொல்கிறேன் முதல் அமைச்சர் அவர்கலே இந்தி திணிப்பு கிடையாது

அது மட்டுமில்லாமல் சில குழந்தைகளை பேச வைக்கிறார்கள் தமிழ் மட்டும் எங்களுக்கு முக்கியம் என்று அதைத்தான் நாங்களும் சொல்கிறோம் ஐந்தாவது வரை தமிழில் படியுங்கள் என்று இந்து வேண்டாம் என்று சொல்கிறோம்

மரியாதைக்குரிய முதலமைச்சர் அவர்கள் என்னை பற்றி ஒரு கருத்தைச் சொன்னார் சகோதரி எனக்கு மூன்று மொழியில் வாழ்த்து சொல்லி இருக்கிறார்கள்

அதனால் தான் மூன்று மொழியில் நான் ஹிந்தியை சொல்லவில்லை என்பதே முதலமைச்சர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் சகோதர மொழியில் தான் நான் சொல்லி இருந்தேன்

தேவைப்பட்டால் கற்றுக் கொள்ளலாம் என்பதற்கு சகோதரியே உதாரணம் தெலுங்கானா ஆளுநராக இருந்த போது திரும்பி கற்றுக் கொண்டார்களே அது போல் கற்றுக் கொள்வார்கள் என்று கூறுகிறார்கள்

அது மட்டுமில்ல வயதான பிறகு கற்றுக் கொள்வது எவ்வளவு சிரமம் என்பதை தெரிந்து கொண்ட பிறகு தான் சிறிய குழந்தைகளாக இருக்கும் பொழுது அந்த குழந்தைகள் மூலை பல மொழிகளை கிரகிக்கும்

அந்த இலகுவான திட்டத்தை குழந்தைகளுக்கு கொடுங்கள் பாமர குழந்தைகள் படித்துவிட்டு போகட்டும் அதன் மூலமாக எதிர்காலத்தில் அவர்களுக்கு பல வாய்ப்புகள் வரட்டும்

ஒரு லாங்குவேஜ் மற்றொரு கம்யூனிகேஷன். கம்யூனிகேஷன் அதிகரிக்கும் பொழுது அவர்களுக்கு வாய்ப்பு நிறைய கிடைக்கும் ஆகையால் முதலமைச்சர் அவர்களே ஏழை குழந்தைகளின் படிப்பில் இடையில் நிற்காதீர்கள் என்பதை கேட்டுக்கொள்கிறேன்

எதற்கு கண்டிப்பு என்று எனக்கு தெரியவில்லை தர்மேந்திர பிரசாத் தெளிவாக நாங்கள் முன் மொழியில் ஹிந்தியை திணிக்கவில்லை மூன்றாவது மொழியை நாங்கள் அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதற்கு

கமிட்டி பரிந்துரைப்பதை தான் நாங்க சொல்கிறோம்

மீண்டும் தமிழக முதலமைச்சரிடம்

நான் ஒரு கேள்வியை கேட்கின்றேன் வசதியாக அதற்கு பதில் தர மறுக்கிறார்கள் திராவிட முன்னேற்ற கழகத்தினர்

தனியார் பள்ளியில் இந்தி சொல்லிக் கொடுக்கப்படுகிறதா இல்லையா பணக்கார பிள்ளைகளுக்கு மூன்றாவது முறை கற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்பு கொடுக்கப்படுகிறதா இல்லையா

ஆகையால் வருங்காலத்தில் தனியார் பள்ளி பிள்ளைகளும் அரசு பள்ளி பிள்ளைகளும் ஒரு வாய்ப்பு தேடிச் செல்லும் பொழுது தனியார் பள்ளி பிள்ளைகளுக்கு வாய்ப்பு கிடைக்குமா இல்லையா ஏன் அரசாங்க பள்ளிகளுக்கு இதை மறுக்கிறீர்கள் என்று கேட்டால் இன்று வரைக்கும் அதற்கு பதில் இல்லை

இல்லாத திட்டத்தை கொண்டு வந்து அதற்கு போராட்டத்தை அறிவித்து அதற்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அறிவித்து பன்னிரண்டாம் தேதி போராட்டம் என்ற அறிவித்திருக்கிறார் மக்கள் புரிந்து கொள்வார்கள்

விஜய் கூறிய மகளிர் தின வாழ்த்து இன்று பேசு பொருளாகி இருக்கிறது நேரடியாக திராவிட முன்னேற்றக் கழகம் அப்புறப்படுத்த வேண்டும் என்று எங்களுடைய கருத்தை வலிமையாக சொல்லி இருக்கிறார் நீங்கள் விஜயின் இப்தார் விருந்தை பற்றி பேசுகிறீர்கள் நான் விஜயின் மகளிர் வாழ்த்தை பற்றி பதிவு செய்திருக்கிறேன் நன்றி எனக் கூறிவிட்டுச் சென்றார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்