Admin
தமிழ்நாடு

தமிழகத்தை பற்றாக்குறை மாநிலமாக மாற்றியது அதிமுக - முதல்வர் பதிலடி

505 வாக்குறுதிகளில் 389 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாக கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மீதமுள்ள 116 வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

Jeeva Bharathi

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் உள்ள வீரமங்கை வேலுநாச்சியார் நினைவிடம் அருகில் 1 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மருது சகோதரர்களுக்கு சிலை அமைக்கப்பட உள்ளது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து 50 லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள வாளுக்கு வேலி அம்பலத்தின் உருவச்சிலையையும் அவர் திறந்து வைத்தார்.

மேலும் 376 கோடியே 25 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 45 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்த அவர், 50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர்,

சிவகங்கை, திருப்பத்தூர், காளையார்கோவில் உள்ளிட்ட பகுதி மக்களுக்காக 616 கோடி ரூபாயில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

சிவகங்கையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளிட்ட திமுக ஆட்சியின் செயல்திட்டங்களை எடுத்துரைத்தார்.

ஒவ்வொருவரின் குடும்பத்திலேயும் அண்ணனாக, தம்பியாக, தந்தையாக, நண்பனாக இருப்பதாக பெருமிதம் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு மனிதரையும் நாடிச் சென்று அரசு உதவுவதாக தெரிவித்தார்.

505 வாக்குறுதிகளில் 389 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாக கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மீதமுள்ள 116 வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

ஆனால் திண்ணையில் அமர்ந்து வெட்டிப்பேச்சு பேசுவது போல் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வெட்டிக் கதை பேசி வருவதாக கூறியவர், மற்றொரு கட்சியின் அறிக்கையை ஈபிஎஸ் COPY, PASTE செய்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

தமிழ்நாட்டை பற்றாக்குறை மாநிலமாக மாற்றியது அதிமுக அரசுதான் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 10 ஆண்டுகாலமாக ஆட்சி செய்த அதிமுகவினர் பதவிக்காக மட்டுமே டெல்லி சென்றதாகவும் விமர்சனம் செய்தார்