தமிழ்நாடு

மாணவர்கள் மது அருந்துவது குறித்தான பொதுநல வழக்கு...பாராட்டிய நீதிபதிகள்!

Tamil Selvi Selvakumar

பள்ளி மாணவர்கள் மது அருந்துவதை தடுக்க உரிய தீர்வு காணப்பட வேண்டும், இல்லையென்றால் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என மதுரைக்கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உரிய தீர்வு வேண்டி மனு:

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மாணவர்கள் சீருடையுடன் மது அருந்துவது தொடர்பான புகைப்படங்கள் கொண்ட மனுவை தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பொது நல வழக்கைத் தொடர்ந்த மனுதாரரை நீதிமன்றம் பாராட்டுகிறது என்று நீதிபதிகள் கூறினர்.

தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் மது அருந்துவதை தடுக்க உரிய தீர்வு காணப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

மேலும் மனுதாரர் தொடர்ச்சியாக இவ்வழக்கு தொடர்பான விபரங்களைத் திரட்டவும், அரசுத் தரப்பில் இது தொடர்பாக விளக்கம் பெற்று தரவும்  உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.