தமிழ்நாடு

பெட்ரோல் மீதான வரி குறைப்பு... இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் புதிய விலை!!

தமிழகத்தில் பெட்ரோல் மீதான வரி, மூன்று ரூபாய் அளவிற்கு குறைக்கப்படும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

தமிழகத்தில் பெட்ரோல் மீதான வரி, மூன்று ரூபாய் அளவிற்கு குறைக்கப்படும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் முதல் பட்ஜெட், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பேசிய நிதி அமைச்சர் தமிழகத்தில் 2 கோடிஇருசக்கர வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளதாக குறிப்பிட்டார். பெட்ரோல் விலை உயர்வால், ஏழை, எளிய மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருவதாக கூறிய நிதி அமைச்சர், மக்களின் வலியை உணர்ந்து, தமிழகத்தில் பெட்ரோல் மீதான வரி, மூன்று ரூபாய் அளவிற்கு குறைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்த வரிக்குறைப்பு நடவடிக்கையால், தமிழகத்தில் பெட்ரோல் விலை மீண்டும் 100 ரூபாய்க்கு கீழ் செல்லும் என கூறிய அவர், அரசின் இந்த நடவடிக்கை உழைக்கும் வர்க்கத்தினருக்கு பேருதவியாக இருக்கும் என தெரிவித்தார்.பெட்ரோல் மீதான வரிக்குறைப்பால் அரசுக்கு ஆயிரத்து 160 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஒன்றிய அரசே முழு பொறுப்பேற்க வேண்டுமென தெரிவித்தார்.