தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தெலுங்கானா முதல்வர் சந்திப்பு...!!

தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து  ஆலோசனை நடத்தினார்.

Malaimurasu Seithigal TV

முதலமைச்சரின் சென்னை ஆழ்வார்ப்பேட்டை  இல்லத்தில்  இந்த சந்திப்பு  நடைபெற்றது. தமது இல்லத்துக்கு வருகை தந்த  சந்திரசேகர ராவை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றார். இந்த சந்திப்பில் தெலங்கானா, தொழில்துறை அமைச்சர் கே.டி.ராமராவ் மற்றும் இரு மாநில முதலமைச்சர் குடும்பத்தினரும் இடம் பெற்றிருந்தனர். 

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில் தேசிய அரசியல் மற்றும் இரு மாநில நல்லுறவு தொடர்பாக இரண்டு முதலமைச்சர்களும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும்  கோதாவரி காவிரி நதிநீர் இணைப்பு தொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை  நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன


மேலும் வரும்  2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும்  காங்கிரரஸ பாஜகவுக்கு  மாற்றாக 3 வது  அணி அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்தும் இருவரும் பேசியதாக சொல்லப்படுகிறது..

மத்திய அரசுக்கும், சந்திரசேகர ராவ் அரசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில்  முக்கியத்துவம் பெற்றுள்ளது.