தமிழ்நாடு

மெரினாவில் அமைக்கப்பட்ட தற்காலிக நடைபாதை... மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடு...

சென்னை மெரினா கடலை மாற்று திறனாளிகள் சிரமமின்றி அருகில் சென்று பார்த்து ரசிக்கும் வகையில் தற்காலிக பாதை அமைக்கப்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

பண்டிகை காலங்களில் மாற்று திறனாளிகள் கடற்கரைக்கு  செல்லும் வகையில் மணற்பரப்பில் தற்காலிக நடைபாதை  அமைக்கபடுவது வழக்கம். அந்த வகையில் வருகிற ஜனவரி 3 ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படவுள்ளது., மேலும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர்ச்சியாக பண்டிகை காலம் என்பதால் மாற்றுத்திறனாளிகள் கடற்கரைக்கு அருகில் சென்று கடல் நீரில் கால் நனைத்து மகிழும் வகையில் தற்போது பலகைகளைக் கொண்டு தற்காலிக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

இன்று அல்லது நாளைக்குள் இதன் பணிகள் நிறைவு பெற்றவுடன் திங்கள்கிழமை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, இந்த நடைப்பாதையை துவங்கி வைக்க இருக்கிறார். மாற்று திறனாளிகள் தங்கள் சக்கர நாற்காலியிலும், மோட்டார் வாகனத்திலும் சிரமமின்றி கடற்கரைக்கு சென்று கடல் அலையை அருகில் கண்டு ரசித்து மகிழ்கின்றனர்.

நடைபாதை அமைக்கப்பட்டுள்ளதால் சிரமமின்றி கடல் அலையை கண்டு ரசிக்க முடிகிறது என்றும் இந்த தற்காலிக நடைபாதையை நிரந்தரமாக அமைத்தால் மாற்று திறனாளிகள் பண்டிகை காலம் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் கடற்கரைக்கு சிரமமின்றி செல்ல ஏதுவாக இருக்கும் என்று  மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை வைக்கின்றனர்.