தென்காசியில் வரலாற்று சிறப்புமிக்க 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு காசிவிஸ்வநாதர் சுவாமி - உலகம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு தினந்தோறும் பல்லாயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.
இங்கு வரும் உள்ளூர் வெளியூரைச் சேர்ந்த பக்தர்கள், வெளியூரில் இருந்து பல மணி நேரம் பயணிக்கும் டிரைவர்கள் மற்றும் நடைபாதை வாசிகளுக்காக கோவிலின் வட பகுதியில் கட்டண கழிப்பிடக் கட்டிடம் மட்டுமே உள்ளது. இதனால் இப்பகுதியில் இலவச கழிப்பிட வசதி இல்லாமல் பக்தர்கள் சிரமப்பட்டு வந்தனர்.
இக்குறையை போக்கும் வகையில் “நமக்கு நாமே” திட்டத்தின் மூலம் ஆண்,பெண் இருவரும் பயன் பெறும் வகையில் தனித் தனியாக உபயோகப்படுத்தும்படியான இ. டாய்லட் அமைக்கப்பட்டது. இதை தென்காசி நகர் மன்ற தலைவர் சாதீர் இன்று மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத் தலைவர் சுப்பையா மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.