தமிழ்நாடு

இரு தரப்பினரிடையே மோதல்... கடைகள் சூறையாடப்பட்டு வாகனங்களுக்கு தீ வைப்பு..!

திண்டுக்கல் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் கடைகள் சூறையாடப்பட்டு இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.

Tamil Selvi Selvakumar

செட்டிநாயக்கன்பட்டி இளைஞர்கள் சிலரும், காந்தி நகர் காலனி இளைஞர்கள் சிலரும் கரட்டு கோவில் அருகே தனித்தனியாக மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு தரப்பு இளைஞர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதை மற்றொரு தரப்பு விலக்கி விடச் சென்ற போது அது இரு தரப்புக்கும் இடையே மோதலாக மாறியது.

இதையடுத்து செட்டிநாயக்கன்பட்டி  இளைஞர்கள் சுமார் 10 பேர் 5-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் காந்தி நகர்  வந்து ஒரு மீன் கடை மற்றும் 2 பலசரக்குக் கடைகளை அடித்து நொறுக்கினர். ஆத்திரமடைந்த காந்தி நகர் காலனி இளைஞர்கள் செட்டிநாயக்கன்பட்டி இளைஞர்களின் இரண்டு இரு சக்கர வாகனங்களை கைப்பற்றி தீ வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.