தமிழ்நாடு

கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து....

கோவையில் கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில்  பரப்பரப்பு நிலவியது.

Malaimurasu Seithigal TV

கோவை அடுத்த ஸ்ரீபதி நகரில் மார்ட்டின் என்பவருக்குச் சொந்தமான கார் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் குடோன் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று மதியம் அந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

மளமள வென எரிந்த தீயானது குடோன் முழுவதும் பரவ தொடங்கியது. இதனால் வானை முட்டும் அளவுக்கு கரும்புகை வெளியேறியது. இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் குடோனில் காருக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகம் இருந்ததால், தீ வேகமாக எரிய ஆரம்பித்தது.  இதனால் குடோனில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கார்கள் மற்றும் உதிரிபாகங்கள் தீக்கு இரையாகி சாம்பலாகின.

இதற்கிடையில் தீயணைக்கு முயற்சியில் ஈடுபட்ட வீரர்கள், சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். அதனைதொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள ராமநாதபுரம் போலீசார், தீ விபத்துக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.