தமிழ்நாடு

"தமிழகத்தில் தீவிரவாதத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது" - தங்கம் தென்னரசு காட்டம்!

Tamil Selvi Selvakumar

தமிழகத்தில் எந்த காலத்திலும் தீவிரவாதத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

ஆதாரங்கள் எதுவும் அழிக்கப்படவில்லை:

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கோவை சம்பவம் தொடர்பாக பேசினார். அப்போது பேசிய அவர், கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரம் தொடர்பான ஆதாரங்கள் எதுவும் அழிக்கப்படவில்லை என்று கூறினார்.

மேலும், விபத்து நடந்தது முதல் காவல்துறையினருடன் இணைந்து என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார். தொடர்ந்து,  தமிழகத்தில் எந்த காலத்திலும் தீவிரவாதத்தை  அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, கோவை சம்பவம் தொடர்பாக ஆளுநர் கேள்வி எழுப்பியது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, தமிழ்நாடு ஆளுநர் தேவையின்றி கருத்துக்களை கூறி வருவதாகவும், அவர் எழுப்பிய கேள்விக்கு அவரிடம் தான் பதில் கேட்க வேண்டும் எனவும் காட்டமாக பதலளித்தார்.