தமிழ்நாடு

கலைஞர் கோட்டம் திறப்பு...நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Tamil Selvi Selvakumar

கலைஞர் கோட்டம் அமையக் காரணமான அனைவருக்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். 

நேற்றைய தினம், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கலைஞர் கோட்டத்தை திறந்து வைப்பதாக இருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட உடல்நிலை குறைவு காரணமாக இந்நிகழ்ச்சிக்கு நிதிஷ் வருகை தரவில்லை. 

இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அவரது தங்கை செல்வியும் இணைந்து கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்தனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், சொற்களாலும் எழுத்துகளாலும் நம் எண்ணங்களில் நிறைந்துவிட்ட கருணாநிதி நூற்றாண்டில் கலைஞர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டதாக குறிப்பிட்டு, இந்தியாவின் ஜனநாயகத்தைக் காத்திடும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றிக் அவருக்கு புகழ்சேர்த்திடும் பணியை இன்றே   தொடங்குவோம் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, நீடுபுகழ் கலைஞரின் வண்மையைக் காட்சிப்படுத்தும் இந்த எழிலோவியம் அமையக் காரணமான அனைவர்க்கும் முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.