அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட தனக்கு வாழ்த்து தெரிவித்து வரும் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு எடப்பாடி பழனிச்சாமி நன்றிகளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் நூற்றாண்டுகளை கடந்து அதிமுக மக்களுக்காவே இயங்கும் என தெரிவித்துள்ளார். மேலும், தனது வெற்றிக்காக பாடுபட்ட அதிமுகவினர், கூட்டணிக் கட்சியினர், தோழமைக் கட்சித் தலைவர்கள், சமூக இயக்கங்களை சேர்ந்தவர்கள் மற்றும் கலைத் துறையை சேர்ந்தவர்கள் உள்ளிட்டோருக்கு நன்றிகளை தெரிவித்துள்ளார்.