தமிழ்நாடு

முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த வி.சி.க. சட்டமன்ற உறுப்பினர்...!

Tamil Selvi Selvakumar

நாவலூர் சுங்கச்சாவடி கட்டணம் ரத்து செய்யப்பட்டதற்கு, வி.சி.க. சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி மற்றும் அப்பகுதி மக்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

பழைய மகாபலிபுரம் ராஜீவ் காந்தி சாலையில் உள்ள நாவலூர் சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ஓ.எம்.ஆர். பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் மறைமலைநகரில் நடைபெற்ற கள ஆய்வு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், நாவலூர் சுங்கச்சாவடி கட்டணம் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார்.

இதனையடுத்து, வி.சி.க. சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி மற்றும் அப்பகுதி குடியிருப்பு சங்க நிர்வாகிகள், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.