தமிழ்நாடு

நாகூர் தர்காவில் கொடியேற்றத்துடன் துவங்கிய 465 ஆம் ஆண்டு கந்தூரி விழா.!!

நாகூர் தர்காவின் 465-ம் ஆண்டு சந்தனக்கூடு விழா எளிமையான முறையில் நடைபெற்றது

Malaimurasu Seithigal TV

நாகூர் தர்காவின் 465-ம் ஆண்டு சந்தனக்கூடு விழா எளிமையான முறையில் நடைபெற்றது.

நாகூர் ஆண்டவர் என போற்றப்படும் செய்யது சாகுல் ஹமீது பாதுஷாவின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு உலக புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 465-ம் ஆண்டு கந்தூரிவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.

இந்த நிலையில், கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தாபூத் எனும் சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது.

ஊர்வலத்தில் வழி நெடுகிலும் நின்றிருந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சந்தனக்கூடின் மீது பூக்களை தூவி வழிபாடு செய்தனர்.