தமிழ்நாடு

சாப்பாட்டில் பல்லி இருந்த விவகாரம்... - உணவக உரிமையாளரிடம் விசாரணை...

சென்னை குரோம்பேட்டையில் உள்ள உனவகத்தில்  சாப்பாட்டில் பல்லி கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

குரோம்பேட்டை, ஜி.எஸ்.டி.சாலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக காரைக்குடி செட்டிநாடி மெஸ் என்ற உணவகம்  செயல்பட்டு வருகிறது. பாளையங்கோட்டையை சேர்ந்த இசக்கி, மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் இந்த உணவகத்திற்கு சென்றனர். அப்போது அவர்கள் வாங்கிய சாப்பாட்டில்  சாம்பார் ஊற்றிய போது அதில்  பல்லி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து இசக்கி அளித்த புகாரின் அடிப்படையில் பல்லாவரம் நகராட்சி அலுவலக  சுகாதார அதிகாரிகள் உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் உணவக மேலாளர் தர்மதுரை என்பவரை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.