தமிழ்நாடு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தல் ட்ராமா போல் நடந்து முடிந்துள்ளது ....டிடிவி.தினகரன் ....!!

அதிமுகவில் நடந்த ஒருங்கிணைப்பாளர் தேர்தல் கேலிக்கூத்தாக ட்ராமா போல் நடந்து முடிந்துள்ளது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

தஞ்சை முன்னாள் முப்படை தளபதி பிபின்ராவத் படத்திற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,

திமுக ஆட்சிக்கு வருவதற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள், வந்த பிறகு மறந்து விடுவார்கள், 7 பேர் விடுதலை ஆக இருக்கட்டும் சிறுபான்மையினரின் நலன் ஆக இருக்கட்டும் நாங்கதான் காவலன் என்று ஏமாற்றுவார்கள்,  திமுகவை நம்பிய மக்களும், அவர்கள் திருந்தி இருப்பார்கள் என்று வாக்களித்தார்கள் ஆனால் அவர்கள் திருந்தவே இல்லை என்பது இந்த ஆறு மாதத்திற்குள்ளாகவே தெரிகிறது என்றார்.

மேலும் அதிமுகவில் நடந்த ஒருங்கிணைப்பாளர் தேர்தல் கேலிக்கூத்தாக ட்ராமா போல் நடந்து முடிந்துள்ளது, அவர்கள் உட்கட்சி சண்டையில் தலைமை கழகத்தில் குண்டர்களை வைத்து தொண்டர்களை தாக்கியுள்ளார்கள் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,  அமமுக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தயாராகி கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.