தமிழ்நாடு

அனுமதியில்லாத விளம்பர பலகைகளை அடியோடு ஒழிப்பதே நோக்கம் - அமைச்சர் கே.என். நேரு!

Tamil Selvi Selvakumar

அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை ஒழிப்பதே தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள சட்டத் திருத்தத்தின்  நோக்கம் என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் அனைத்தையும் ஒழிப்பது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு செய்தி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை ஒழிப்பதே தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள சட்டத் திருத்தத்தின்  நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 6 மாதங்களில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள 500-க்கும் மேற்பட்ட தடை உத்தரவிற்கு உட்படாத விளம்பர பலகைகள் தயவு தாட்சனையின்றி அகற்றப்பட்டுள்ளன.

ஆனால் இன்னும் ஆங்காங்கே சுமார் 697 விளம்பர பலகைகள் நீதிமன்ற தடை உத்தரவுகளால் சென்னை மாநகராட்சியால் அகற்ற இயலாத சூழலில் உள்ளன என்றாலும், அவற்றை அகற்றிட உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.