தமிழ்நாடு

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது சோதனை நடத்த இதுதான் காரணம் - கே.பி.முனுசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

திமுக அரசின் 8 மாத கால ஆட்சியின் தோல்வியை மறைக்கவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்படுவதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

Malaimurasu Seithigal TV

திமுக அரசின் 8 மாத கால ஆட்சியின் தோல்வியை மறைக்கவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்படுவதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தோல்வியடைந்ததை மக்களிடமிருந்து மறைக்கவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது சோதனை நடத்தப்படுகிறது என கூறினார்.

ஆட்சியாளர்களின் நிர்பந்தத்தின் காரணமாகவே தற்போது, லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்துவதாக குற்றம்சாட்டிய அவர், சோதனையில் எந்தவித ஆதாரங்களும் கிடைப்பதில்லை எனவும் தெரிவித்தார்.