தமிழ்நாடு

துப்பாக்கி சூடு பயிற்சியின் போது தவறுதலாக குண்டு பாய்ந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு பயிற்சியின் போது, தவறுதலாக தலையில் குண்டு பாய்ந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Malaimurasu Seithigal TV

நார்த்தாமலை அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கான துப்பாக்கி சூடு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 30ஆம் தேதி அங்கு துப்பாக்கிச் சூடு பயிற்சி நடைபெற்றது. அப்போது, ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு வீட்டில் உணவு உண்டு கொண்டிருந்த புகழேந்தி என்ற 11 வயது சிறுவன் தலையில் குண்டு பாய்ந்தது.

இதில் படுகாயமடைந்த சிறுவனை உறவினர்கள், புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.   

இதனைதொடர்ந்து, அறுவை சிகிச்சையின் மூலம் சிறுவனின் தலையில் பாய்ந்த குண்டை மருத்துவர்கள் அகற்றினர். இதனையடுத்து அவரது உடல் தேறி வருவதாகவும், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இன்று மாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.