தமிழ்நாடு

'மாவட்ட நீதிபதிகள் 4 பேரை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க' மத்திய அரசு ஒப்புதல்!

Malaimurasu Seithigal TV

மாவட்ட நீதிபதிகள் குமரப்பன் சக்திவேல், தனபால், ராஜசேகர் ஆகிய நான்கு பேர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் அளித்த பரிந்துரையை ஏற்றது மத்திய அரசு.

தமிழ்நாட்டில் மாவட்ட நீதிபதிகளாக இருப்பவர்கள் ஆர்.சக்திவேல், பி.தனபால், சி.குமரப்பன், கே.ராஜசேகர். இவர்கள் 4 பேரையும் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளனர். 

இதையடுத்து இந்த 4 மாவட்ட நீதிபதிகளையும், உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பரிந்துரை செய்ய உச்ச நீதிமன்ற  மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் பரிசீலனை செய்தது. பின்னர் "இந்த மாவட்ட நீதிபதிகள் 4 பேரும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு தகுதியானவர்கள். அவர்கள் இதுவரை வழங்கிய தீர்ப்புகளை ஆய்வு செய்ததில், மிகவும் திறமையானவர்கள் என்று தெரிய வந்துள்ளது. எனவே, 4 பேரையும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க வேண்டும்" என்று கருத்து தெரிவித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

இந்த பரிந்துரை ஏற்று கொண்டுள்ள மத்திய அரசு இந்த மாவட்ட நீதிபதிகள் 4 பேரையும் உயர்நீதிமன்றம் நீதிபதிகளாக நியமிக்கும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. மொத்தமாக சென்னை உயர் நீதிமன்றத்திற்கு  75 நீதிபதிகள் வரை அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில் தற்போது 52 நீதிபதிகள் இருக்கிறார்கள். இந்நிலையில் 4 புதிய நீதிபதிகள் பதவியேற்றால் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 56 ஆக உயரும் என்று தெரிகிறது. முன்னதாக இந்த