தமிழ்நாடு

மத்திய அரசின் உதவியோடு செயல்படுத்தப்படும் திட்டங்களை...தங்களுடையது என்று கூறி வருகிறது திமுக!

Tamil Selvi Selvakumar

தமிழ்நாட்டில் மத்திய அரசு உதவியோடு செயல்படுத்தப்படும் திட்டங்களை தங்களது திட்டங்களாக திமுக அரசு கூறி வருவதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச் ராஜா கூறியுள்ளார். 


மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த பாஜக மூத்த தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான எச்.ராஜா, தல்லாகுளத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறியவர், ராகுல் காந்தி மீது பிரதமரோ மத்திய பாஜக அரசோ வழக்கு தொடரவில்லை என்று கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் மத்திய அரசு உதவியோடு செயல்படுத்தப்படும் திட்டங்களை தான் தங்களது திட்டங்களாக திமுக அரசு கூறி வருவதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச் ராஜா கூறியுள்ளார்.