தமிழ்நாடு சட்டப்பேரவையின் செயல்பாடுகளை மத்திய அரசு பாராட்டியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் செயல்படுத்தப்படும் காகிதமில்லாத சட்டமன்றம் திட்டத்திற்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில், காகிதமில்லாத சட்டமன்றம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தினை மிகச் சிறப்பாகவும், விரைவாகவும் செயல்படுத்தியதை பாராட்டி மத்திய அரசு வழங்கிய சான்றிதழை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.
இதையும் படிக்க | காலம் போன காலத்தில் வந்த நேர்காணல் கடிதம்.. மனம் குமுறும் முதியவர்!!