தமிழ்நாடு

பொருநை அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் முதலமைச்சர்...!

Tamil Selvi Selvakumar

நெல்லையில் உலக தரம் வாய்ந்த பொருநை அருங்காட்சியகம் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். 


ஆதிச்சநல்லூா், கொற்கை, சிவகளை உள்ளிட்ட இடங்களில் அகழாய்வில் கிடைத்த பொருட்களைக் காட்சிப்படுத்துவதற்காக, நெல்லையில் உலகத்தரத்திலான பொருநை அருங்காட்சியம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அருங்காட்சியகம் கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில், பொருநை அருங்காட்சியகம் கட்டுமானப் பணிகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடிக்கல் நாட்டி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.