தமிழ்நாடு

புதிய கட்டடங்களுக்கு காணொலிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்...!

Tamil Selvi Selvakumar

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் புதிய கட்டடங்கள் கட்டும் கட்டுமான பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் புதிய கட்டடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூரில் 15 கோடியே 95 லட்சம் மதிப்பில் அரசினர் பாதுகாப்பு இல்ல கட்டிடத்திற்கும், 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் ஒருங்கிணைந்த பயிற்சி மையக் கட்டடத்திற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கால் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்