தமிழ்நாடு

108 ஆம்புலன்ஸிலேயே சென்று பொதுத்தேர்வு எழுதிய மாணவி...ஓமந்தூராருக்கு நேரில் சென்று நலம் விசாரித்த முதலமைச்சர்!

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி சிந்துவை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Tamil Selvi Selvakumar

சென்னையைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி சிந்து உடல் நலமில்லாத போதும், 108 ஆம்புலன்ஸிலேயே சென்று பொதுத்தேர்வு எழுதினார். இதனைக் அறிந்த முதலமைச்சர், சிந்துவிற்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியதன்பேரில், ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் மாணவிக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மாணவியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன், மாணவி சிந்து செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார். தன் விருப்பத்தை தெரிந்து கொண்டு, முதலமைச்சர் நேரில் வந்து சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக மாணவி தெரிவித்துள்ளார்.