தமிழ்நாடு

பிரசாரத்தில் குழந்தைக்கு பெயர் சூட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்...!

Tamil Selvi Selvakumar

கடந்த ஆட்சியில் அதிமுக, அரசு கஜானாவை காலி செய்து வைத்ததால் சில வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். பரப்புரையின் போது பேசிய முதலமைச்சர், 85 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றியுள்ளதாகவும், மீதமுள்ள 15 சதவீத வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவோம் எனவும் தெரிவித்தார்.

மேலும் பல்வேறு திட்டங்கள் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கொண்டுவரப்படும் என கூறிய முதலமைச்சர், அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசு சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என குற்றஞ்சாட்டினார். இதனிடையே பிரசாரத்தின் போது குழந்தைக்கு கருணாநிதி என பெயர் சூட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சொல்வதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வது தான் திமுக அரசு என பெருமிதம் தெரிவித்தார்.