தமிழ்நாடு

பல்லில்லாத பாம்பாக காங்கிரஸில் இருக்கிறார் கே.எஸ். அழகிரி ....அண்ணாமலை...!!

பாரத பிரதமரின் வருகையை தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

தமிழ்நாடு சிவசேனா கட்சியை பாஜகவுடன் இணைக்கும் நிகழ்ச்சி சென்னை பட்டாளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில்,

பாரத பிரதமரின் வருகையை தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் தமிழ்நாடு அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு முதலமைச்சர் இருப்பார் என நம்புகிறோம் என்றார்

கே எஸ் அழகிரி ஒரு பல்லில்லாத பாம்பாக காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வருகிறார் என்றும் அவருக்கு All the best என கூறினார்.

கேரளாவில் படுகொலைக்கு ஆளாக்கப்பட்ட பாஜக நிர்வாகி விவகாரத்திற்கு தமிழக பாஜக கடும் கண்டனம்.கேரள முதல்வர் இதற்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டினார். 

தொடர்ந்து பேசிய அவர், அமைச்சர் சேகர்பாபு மற்றும் அவரது குடும்பத்தினர் முதலில் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கின்றனர் அப்பொழுது தெரியவில்லையா கொரோனா தொற்று என கேள்வி எழுப்பினார்.