தமிழ்நாடு

கோவை - பல்லடம் சாலைக்கு பெயர் சூட்டிய முதலமைச்சர்...!

Tamil Selvi Selvakumar

பொள்ளாச்சியில் புதிதாக போடப்பட்டு வரும் கோவை - பல்லடம் சாலைக்கு நா.மகாலிங்கம் பெயர் சூட்டப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பத்மபூஷன் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் நூற்றாண்டு விழா:

சென்னை, கலைவாணர் அரங்கில் கொங்குநாடு அறக்கட்டளை சார்பில் பத்மபூஷன் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட முதலமைச்சர், நா.மகாலிங்கம் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து, கொங்கு அறக்கட்டளை சார்பில் அருட்செல்வர் விருதினை ஒளாவை நடராஜன், ஏ.வி.எம். சரவணன், CA. ஜி.ராமசாமி ஆகியோருக்கும், காளிங்கராயன் விருதினை  நா.கணேசன் என்பருவருக்கும், கொங்கு வேள் விருதினை  வி.முருகன் என்பவருக்கும் விருதுகளை வழங்கினார். 

அருட்செல்வர் என்றால் மகாலிங்கம்:

தொடர்ந்து மேடையில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், பெரியார் என்றால் தந்தை பெரியார், அண்ணா என்றார் பேரறிஞர், கலைஞர் என்றால் கருணாநிதி போல அருட்செல்வர் என்றால் மகாலிங்கம் என்ற  சிறப்புகுறியவர். திருக்குறளை ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் மொழி பெயர்த்தவர், அது மட்டுமல்லமால் வெளிநாடுகளுக்கு சென்று இந்த மொழி பெயர்த்த நூல்களை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கியவர், அதனால் அவருக்கு அருட்செல்வர் என்ற பெயரோடு தமிழ்செல்வர் எனவும் அழைக்கலாம் எனவும், இவரை போல பல அருட்செல்வர்கள் உருவாக வேண்டும் எனவும் கூறினார்.

சாலைக்கு பெயர் சூட்டிய முதலமைச்சர்:

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், பொள்ளாச்சியில் புதிதாக போடப்பட்டு வரும் கோவை - பல்லடம் சாலைக்கு நா.மகாலிங்கம் பெயர் சூட்டப்படும் என்று தெரிவித்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, முத்துசாமி, மு. பெ சாமிநாதன், சக்கரபாணி, கயல்விழி செல்வராஜ், ராமச்சந்திரன், மதிவேந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.