தமிழ்நாடு

நியாய விலை கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்..!

Malaimurasu Seithigal TV

ராணிப்பேட்டை மாவட்டம் நியாய விலை கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் தரங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் திடீரென  ஆய்வுகளை மேற்கொண்டார். மேலும் நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரங்கள் குறித்தும், அளவுகள்  குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார்.

மேலும், நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் தரங்கள் குறித்து பயனாளிகளிடம் கேட்டறிந்தார். குடும்ப அட்டைகளுக்கு வழங்கக்கூடிய அனைத்து பொருட்களும் தரமாகவும், குறைவுகள் இன்றி வழங்கப்பட வேண்டும் எனவும் பணியாளர்களிடம் ஆட்சியர் தெரிவித்தார்.