தமிழ்நாடு

74 வது குடியரசு தினம்...தமிழ்நாட்டில் கோலாகல கொண்டாட்டம்...!

Tamil Selvi Selvakumar

தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், நாட்டின் 74-வது குடியரசு தினம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தமிழ்நாட்டில் 74-வது குடியரசு தினம் விழா கொண்டாட்டம் :

நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஆட்சியர் அருண் தம்புராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட அவர்,  81 பயனாளிகளுக்கு 90 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதேப் போல், அரியலூர்  மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், ஆட்சியர் ரமண சரஸ்வதி  தேசிய கொடியை ஏற்றி  மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து சமாதான புறாவை பறக்கவிட்ட ஆட்சியர், நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள்  162 பேருக்கு நற்சான்றிதழ்களையும் வழங்கினார்.

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டத்தில், ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசிய கொடியை ஏற்றினார். இதனை தொடர்ந்து 30 லட்சத்து 7 ஆயிரத்து 456 ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இதனைதொடர்ந்து செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாக மைதானத்தில் தேசிய கொடியை ஏற்றிவைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஆட்சியர் ஏற்றுக்கொண்டார்.