தமிழ்நாடு

உள் வாடகைக்கு விடப்பட்ட 6 கடைகளை கையகப்படுத்தியது மாநகராட்சி நிா்வாகம்.!!

தஞ்சாவூாில் மாநகராட்சி சார்பில் சட்ட விரோதமாகக் கூடுதல் தொகைக்கு உள் வாடகைக்கு விடப்பட்ட 6 கடைகளை மாநகராட்சி அலுவலர்கள் கையகப்படுத்தினர்.

Malaimurasu Seithigal TV

தஞ்சாவூாில் மாநகராட்சி சார்பில் சட்ட விரோதமாகக் கூடுதல் தொகைக்கு உள் வாடகைக்கு விடப்பட்ட 6 கடைகளை மாநகராட்சி அலுவலர்கள் கையகப்படுத்தினர்.

தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கடைகள் கட்டப்பட்டு, பொது ஏலம் மூலம் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.

இக்கடைகளை வாடகைக்கு எடுத்த சிலர் சட்ட விரோதமாகக் கூடுதல் தொகைக்கு உள் வாடகைக்கு விட்டதாகப் புகார் எழுந்தது.

இதையடுத்து  மாநகராட்சி அலுவலா்கள் ஆய்வு செய்ததில் 6 - கடைகள் மாதம் ரூபாய் 40 -ஆயிரத்துக்கு வாடகைக்கு  விடப்பட்டது கண்டறியப்பட்டது. இதனைதொடர்ந்து  6 கடைகளையும் அலுவலர்கள் கையகப்படுத்தினா்.