தமிழ்நாடு

பல்லடம் நகராட்சியை தனிப் பெரும்பான்மையுடன் கைப்பற்றியது திமுக

Malaimurasu Seithigal TV

திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சியை 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், திமுக 12 இடங்களில் வெற்றிபெற்றது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஒரு இடத்திலும், பாஜக 2 இடங்களிலும் வெற்றிபெற்றது. வெற்றிபெற்ற திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.