தமிழ்நாடு

எதிர்கட்சியினரை அழித்து விட வேண்டும் என திமுக நினைக்கிறது, அது நடக்காது...ஓபிஎஸ்

திமுக அரசு ரொம்ப அவசரப்படுகிறார்கள், காழ்ப்புணர்ச்சியுடன் எதிர்கட்சியினரை அழித்து விட வேண்டும் என நினைக்கிறார்கள், அது நடக்காது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில்,

அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். அதை ஏற்பதும் ஏற்காததும் மக்களின் முடிவு  என கூறிய அவர், சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என்றார்.

அதிமுக அரசு கொண்டு வந்த தாலிக்கு தங்கம், அம்மா உணவகம், மினி கிளினிக் போன்ற அனைத்து மக்கள் நல திட்டங்களையும் திமுக அரசு நிறுத்த கூடாது, தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என கூறினார்.

திமுக அரசு ரொம்ப அவசரப்படுகிறார்கள்,  காழ்ப்புணர்ச்சியுடன் எதிர்கட்சியினரை அழித்து விட வேண்டும் என நினைக்கிறார்கள், அது நடக்காது என கூறிய அவர் அரசியல் இயக்கங்களை நடத்துகிறவர்கள் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும், என்பதே எங்கள் நிலைப்பாடு என தெரிவித்தார்.