தமிழ்நாடு

குடிநீர் வரி கட்டுவதற்கு கடைசி தேதி இதுதான்...சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு!

Tamil Selvi Selvakumar

சென்னையில், குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரியை இம்மாதம் 31-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி செலுத்துவது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இம்மாதம் 31 ஆம் தேதிக்குள் சென்னையில் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரியை செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரி செலுத்துவதற்கு ஏதுவாக அனைத்து பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்கள் அனைத்தும், வார இறுதி நாட்களிலும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த வசதியை பயன்படுத்தி மேல்வை, இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கைகளை தவிர்த்திடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.