தமிழ்நாடு

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் விழுந்த கார்...!

திருத்துறைப்பூண்டி அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து....

Malaimurasu Seithigal TV

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கருவப்பஞ்சேரி என்கிற இடத்தில் கேரளா மாநிலம் திருவண்டுதுரம் பகுதியை சேர்ந்த அபிலேஷ் குடும்பத்தினருடன் வேளாங்கண்ணிக்கு கிழக்கு கடற்கரை சாலையில் சென்றுள்ளார். தூக்க மயக்கத்தில் இருந்த ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த வாய்க்காலில் கவிழ்ந்தது. 

மேலும் அப்பகுதி மக்கள் விரைந்து வந்து காரில் பயணித்த இரண்டு ஆண்கள், ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் என ஐந்து பேரையும் மீட்டு  திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். லேசான காயங்களுடன் அனுமதிக்கப்பட்டவர்கள், சிகிச்சைக்கு பின் வேளாங்கண்ணி புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து எடையூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.