மதுரையை சேர்ந்த 13-வயது மகளுக்கு மதுபோதையில் பெற்ற தந்தையே பாலியல் தொந்தரவு அளித்ததாக கடந்த 2015-ஆம் ஆண்டு சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் இன்றைய விசாரணையில் மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தை ஆறுமுகத்திற்கு சாகும்வரை ஆயுள்தண்டனை வழங்கி மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி ராதிகா அதிரடி தீர்ப்பு வழங்கினார்.