தமிழ்நாடு

கொரோனா  தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பு- சரத்குமார் பாராட்டு

கொரோனா  தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாக  சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.   

Malaimurasu Seithigal TV

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்  கொரோனா நடவடிக்கைகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போதைய அரசு பயணித்துக் கொண்டிருக்கிறது என கூறினார்.

மேலும் அமைச்சர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனை கோடநாடு வழக்கு மறுவிசாரணை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு  சரத்குமார் விளக்கம் அளித்தார்.தவறு செய்திருந்தால் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்ட சரத்குமார்,   நீட் தமிழகத்திற்கு தேவையில்லை என்பது தனது கருத்து என்றார்.