தமிழ்நாடு

டெல்லி புறப்பட்டுச் சென்றார் ஆளுநர்...!

Malaimurasu Seithigal TV

ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

தமிழ்நாடு  ஆளுநர் ஆர்.என். ரவி 2 நாள் பயணமாக சென்னையில் இருந்து காலை 10.10 மணி பயணிகள் விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார்.

டெல்லி செல்லும் அவர் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் மட்டும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசுவார் என கூறப்படுகிறது.

சமீபகாலமாக தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு ஏற் பட்டு உள்ள நிலையில் கடந்த மாதம் 18ந் தேதி சென்று 3 நாள் தங்கி நிலையில் 2 வாரத்திற்குள் 2வது முறையாக செல்லும் பயணம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் தங்கியிருக்கும் ஆளுநர் நாளை மாலை சென்னை திரும்புகிறார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.