தமிழ்நாடு

மீண்டும் 4 நாள் பயணமாக டெல்லி சென்றார் ஆளுநர்...!

Tamil Selvi Selvakumar

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாட்கள் அரசு முறை பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார். 

ஆளுநர் ஆர்.என்.ரவி நான்கு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். டெல்லி சென்ற அவர், மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

முன்னதாக, கடந்த மாதம் 18ந் தேதி 3 நாள் பயணமாகவும், பின்னர், இம்மாதம் 2ந் தேதி 2 நாள் பயணமாகவும் ஆளுநர் டெல்லி சென்று திரும்பினார். இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மீண்டும் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.