udhayanidhi stalin  
தமிழ்நாடு

“என்றைக்குமே கை நம்மை விட்டு போகாது” திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து உதயநிதி ஸ்டாலின் சூசகம்!!

நேற்றிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். அனைவரும்...

மாலை முரசு செய்தி குழு

 வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் வீரா சுவாமிநாதன் இல்ல திருமண விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திருமண விழா மேடைக்குள் வருவதற்குள் என் கை என்னிடம் இருக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் கை ஒருபொழுதும் நம்மை விட்டு போகாது என்று  காங்கிரஸ் திமுக கூட்டணி குறித்து மேடையில் சூசகமாக பேசினார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா.சாமிநாதன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்,

“நம்முடைய அரசு மகளிருக்கான அரசாங்க விளங்குகிறது. 800 கோடி பேர் அரசு பேருந்தில் பயணங்களை மேற்கொண்டு உள்ளனர் அரசு பேருந்தில். கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மூலம் 1 கோடி 20 இலட்சம் பேருக்கு ரூ. 1000 வழங்கப்பட்டு உள்ளது.

இன்னும் இரண்டு மாதங்களில் அனைத்து மகளிர் உரிமை திட்டம் வழங்க முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.

நேற்றிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன் அனைவரும் உங்களது கைகளை கொடுத்து என்னை பாசத்தோடு வரவேற்றீர்கள். 

முழுமையாக வந்து சேர்வேனா என்று தெரியவில்லை ஆனால் என்னுடைய கை என்னை விட்டு போகாது, அதே மாதிரி தான் கையும் நம்மை விட்டு போகாது ஆனால் என்றைக்குமே கை நம்மளை விட்டு போகாது என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறேன், என திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து சூசகமாக பேசியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஒன்றிய அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி என்ற அடிமை கிடைத்துள்ளார். மேலும் பல அடிமைகளை தேடி வருகின்றனர். எத்தனை அடிமைகள் வந்தாலும் திமுக விரட்டி அடிக்கும்.

தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய வரி பணத்தை  ஒன்றிய அரசு தரவில்லை. எத்தனை கோடி கொடுத்தாலும் தமிழ்நாட்டில் எப்போதும் புதிய கல்வி கொள்கையை கொண்டு வரமாட்டார்  முதல்வர். தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் திட்டங்களை மற்ற மாநிலங்கள் உற்று கவனிக்கிறார்கள். மற்ற மாநில முதல்வர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் முதல்வரை பலோ செய்து வருகிறார்கள்.

எடப்பாடி பழனிச்சாமி ஒரு பஸ் எடுத்து கிட்டு ஊர் ஊராக சுற்றுகிறார். எடப்பாடி பழனிச்சாமி எம்ஜிஆரை மறந்து விட்டார்.  எடப்பாடி பழனிச்சாமிக்கு யாரை பார்த்தாலும் அமித்ஷா முகம் தான் தெரிகிறது. அவர் தான் அவருக்கு ஒனர்.தமிழகத்தில் 200 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும். அதில் முதல் தொகுதியாக  வேடசந்தூர் தொகுதி திமுக வெற்றி பெறும்” என பேசியுள்ளார்.

திமுக கூட்டணிக்குள் சலலசப்பு உருவாகியுள்ளது என்ற பேச்சுக்கள் நீண்ட காலமாக எழுந்து வருகின்றது. அதிலும் குறிப்பாக செல்வப்பெருந்தகை கட்சியை விட்டுவிட்டு  விஜய் -உடன் போய்விடுவார் என்றெல்லாம் ஆருடம் சொன்னார்கள். 

மேலும் கரூர் துயர சம்பவத்தின்போது, விஜய் தேசிய கட்சியான காங்கிரஸிடம் உதவிகோரியதாக சொல்லப்பட்டது, ஆனால் அணைத்து கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக உதயநிதியின் பேச்சு அமைந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.