தமிழ்நாடு

தமிழ்சங்க பேரவை மாநாட்டில் தமிழை புகழ்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Tamil Selvi Selvakumar

இந்தியாவின் வரலாறு இனி தமிழகத்தில் இருந்து எழுதப்பட வேண்டும் என  வடஅமெரிக்க தமிழ் சங்கப் பேரவை ஆண்டு விழாவில் காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

வடஅமெரிக்க தமிழ் சங்கப் பேரவை ஆண்டு விழாவில் காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசினார். அப்போது உலகின் மூத்த மொழிக்கு சொந்தக்காரர்கள் நாம் எனவும், உலகில் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்களுக்கு தமிழ்நாடு தான் தாய்வீடு எனவும் குறிப்பிட்டார். படித்த மேம்பட்ட தமிழ் சமூகமாக தமிழர்கள் விளங்கியதை கீழடி தொல்லியல் ஆய்வுகள் உறுதிபடுத்துவதாகவும் அவர் பெருமையுடன் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், இந்திய வரலாறு இனி தமிழ்நாட்டில் இருந்து எழுதப்பட வேண்டும் என வலியுறுத்தினார். தங்களுக்கென எந்த வரலாறும் இல்லாததால்தான், தமிழின் பழம்பெருமை குறித்து நாம் பேசுவது பலருக்கு கசப்பாக இருக்கிறது எனவும் அவர் சாடினார்.