தமிழ்நாடு

”எம்ஜிஆர் திரையில் பாடினார்...அதை நிறைவேற்றியவர் மோடி” - எல்.முருகன்

Tamil Selvi Selvakumar

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து இலங்கை மீன்வளத்துறை செயலாளர், இந்திய மீன்வளத்துறை செயலாளர், வெளியுறவுத்துறை செயலாளர் ஆகியோர் உள்ள கூட்டத்தில் விவாதித்துக் கொண்டிருப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். 

சாகர் பரிக்ரமா  திட்டத்தின் மூலம் மீனவர்களிடம் கலந்துரையாடல் மற்றும் கருத்து கேட்கும் நிகழ்ச்சி கடலூர் துறைமுகம் புதிய மீன்பிடி இறங்குதளத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மீனவர்களுக்கு கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் மூலம் கடனுதவி வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசியவர், எம்ஜிஆரின் திரைப்பாடலான ”தரை மேல் பிறக்க வைத்தாய் எங்களை கண்ணீரில் மிதக்க வைத்தாய்” என்ற பாடலை சுட்டிக்காட்டி எம்ஜிஆர் திரையில் பாடினார்...மீனவர்களுக்கு பல நலத்திட்டங்களை செய்து அதை நிறைவேற்றியவர் மோடி என கூறினார்.  

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தவர், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து இலங்கை மீன்வளத்துறை செயலாளர், இந்திய மீன்வளத்துறை செயலாளர், வெளியுறவுத்துறை செயலாளர் ஆகியோர் உள்ள கூட்டத்தில் விவாதித்துக் கொண்டிருப்பதாகவும், எல்லை தாண்டி மீன் பிடிப்பது தொடர்பாக தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது இரண்டு நாடுகளுக்கு இடையேயான பிரச்சனை எனவும் கூறினார்.