சென்னை கோயம்பேடு பாலத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பதில் அறிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் எ.வ.வேலு,
இந்த மேம்பால பணிக்கு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி 2018-ம் ஆண்டே பணிகளை முடித்திருக்க வேண்டும் என்றும், ஆனால் பணிகளை முடிக்க வேண்டிய காலம் முடிந்தும் 23 மாதங்கள் கும்பகர்ணனை போல உறக்க நிலையில் இருந்தது கடந்த அ.தி.மு.க. அரசு தான் எனவும் விமர்சித்துள்ளார்.
ஒப்பந்த காலத்திற்குள் பணிகளை முடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த எடப்பாடி அரசு, இன்று சாலை மேம்பாலப்பணிகள் கால தாமதமாக நடைபெறுவதாக நீலிக்கண்ணீர் வடிப்பது ஏன்? என அமைச்சர் எ.வ.வேலு கேள்வி எழுப்பியுள்ளார்.