தமிழ்நாடு

பாலியல் தொல்லை கொடுத்த ஆண்...கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த மாணவி! 

கல்லூரி மாணவி ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Malaimurasu Seithigal TV

கல்லூரி மாணவி ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கேளம்பாக்கத்திற்கு அருகில் உள்ள தனியார் கல்லூரியில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார்.இந்த மாணவி வேறு ஒரு கல்லூரியில் படித்திக்கொண்டிருந்த போது,அதே பள்ளியில் பணிபுரிந்து வந்த செந்தில் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

செந்தில் என்பவர் பெரம்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.இவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.மேலும் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார். பாலியல் தொல்லைக்கு இணங்க மறுத்த அந்த பெண் இதனை ஏற்க மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த பெண், செந்தில் என்பவரை கேளம்பாக்கத்துக்கு வரவழைத்துள்ளார். செந்தில் தனியாக இந்த பெண்ணை சந்திக்க வந்த நிலையில்,பாதிக்கப்பட்ட அந்த பெண் அவருடைய நண்பர் அருண்பாண்டியனுடன் சேர்ந்து,செந்திலை கழுத்தில் அறுத்து,நெஞ்சில் கத்தியால் குத்தி அவரை கொடூரமாக கொலை செய்துள்ளார்.போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.