தமிழ்நாடு

குடிநீர் வழங்க அரசு ஆவண செய்யுமா? அமைச்சர் கே.என். நேரு பதில்!

Tamil Selvi Selvakumar

மதுரவாயல் தொகுதி 143 வது வார்டு நொளம்பூர் பகுதிக்கு சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என். நேரு பதிலளித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வினாக்கள் விடை நேரம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து பேசுகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி, மதுரவாயல் தொகுதி 143 வது வார்டு நொளம்பூர் பகுதிக்கு சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் குடிநீர் வழங்க அரசு ஆவண செய்யுமா என கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, மதுரவாயல் பகுதியில் நடைபெற்று வரும் அனைத்து பணிகளும் ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தவர், இது தொடர்பாக அதிகாரிகளிடம் கலந்து ஆலோசனை செய்து புதிதாக அதிக கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டியையும் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதி அளித்தார்.