தமிழ்நாடு

அடி பம்பையே மூடி சாலை அமைத்த நகராட்சி ஒப்பந்ததாரர்..!

அரக்கோணம் நகரில் அடி பம்பை மூடி சாலை அமைத்த நகராட்சி ஒப்பந்ததாரர்..!

Malaimurasu Seithigal TV

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சி 18 வது வார்டில் குடிநீர் அடி பம்பை மூடி நகராட்சி ஒப்பந்ததாரர் சாலை அமைத்துள்ளார். இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அரக்கோணம் நகராட்சி 18 வது வார்டில் தாசில்தார் குறுக்கு தெரு உள்ளது. இந்த தாசில்தார் குறுக்கு தெருவில் நகராட்சி சார்பில் இன்று  காண்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

இந்நிலையில், இன்று காண்கிரீட் சிமெண்ட்  சாலை அமைத்த நகராட்சி ஒப்பந்ததாரர், அந்த தெருவில் இருந்த குடிநீர் அடி பம்பையும் சேர்த்து சாலை அமைத்துள்ளனர்.. இதனால் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். மேலும் நகராட்சி ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்கள். பின்னர் இதனை உடனடியாக சரிசெய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.