தமிழ்நாடு

மாணவர்கள், இளைஞர்களின் திறனை வளர்க்க உருவாக்கப்பட்டதுதான் "நான் முதல்வன்" திட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழக மாணவர்கள், இளைஞர்களை  திறன் சார்ந்தவர்களாக உருவாக்கவே ‘நான் முதல்வன்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளதென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Malaimurasu Seithigal TV

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தை சென்னையில் தெடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ், வளர்ந்து வரும் தொழிற்பிரிவுகளான ரோபோட்டிக்ஸ், விர்ச்சுவல் ரியாலிட்டி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவற்றில் திறன் பயிற்சிகள் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக வழங்கப்படவுள்ளன. இதுதவிர அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஜெர்மனி, ஜப்பான், சீன, ரஷ்யா, பிரஞ்ச் மொழிகளும் கற்றுக்கொடுக்கப்படவுள்ளன .

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் , பள்ளிக்கூடம் இல்லாத கிராமமே இல்லை என நாம் பெருமைப்படுவதாக குறிப்பிட்டார். ஆனால் மாணவர்களுக்கு தனித்திறமை இல்லை என்பதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், இந்தியாவை பார்த்து உலக நாடுகள் பயப்படுவதாகவும், குறிப்பாக இளைய சக்திகளை கண்டு அஞ்சுவதாகவும் கூறினார். எனவே இளைஞர்களை நிறைவுள்ளவர்களாக மாற்றுவதற்கே இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.