தமிழ்நாடு

டாஸ்மாக் கடைக்கு தீவைத்த மர்ம நபர்கள் - வெளியான சிசிடிவி காட்சியால் பரபரப்பு

ஈரோடு மாவட்டம் சூளை அருகே டாஸ்மாக் கடைக்கு மர்ம நபர்கள் தீவைத்ததில் 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் எரிந்து சேதமாகின.

Malaimurasu Seithigal TV

ஈரோடு மாவட்டம் சூளை அருகே டாஸ்மாக் கடைக்கு மர்ம நபர்கள் தீவைத்ததில் 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் எரிந்து சேதமாகின.

சூளை அருகேயுள்ள அரசு மதுபான கடையை ஊழியர்கள் வழக்கம் போல் திறக்க வந்தனர். அப்போது, கடையின் முன்புறம் தீவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.  

இது தொடர்பாக  அளிக்கப்பட்ட புகாரின் பேரில்  போலீசார் விசாரணை நடத்தியதில் மர்மநபர்கள் சிலர் தீ வைத்தது தெரிய வந்தது. அங்குள்ள  சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், கடைக்கு தீவைத்த மர்ம நபர்கள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.