தமிழ்நாடு

” உயர்கல்வி படிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது” - அமைச்சர் மனோ தங்கராஜ்

Malaimurasu Seithigal TV

தமிழ்நாட்டில் உயர்கல்வி படிக்க செல்லும் பெண்களின் எண்ணிக்கை 72 சதவீதமாக உயர்ந்துள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான இன்று கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியில் வைத்து 2-ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்

விழாவில் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது:- 

நம்ம ஊர்ல சொல்லுவாங்க அண்டா குண்டா அடகு வைத்து அம்மா தாலியை அடகு வைத்து பிஏ எம்ஏ படித்து விட்டு வேலையில்லைனா நான் பட்டினி கிடந்தா சோறும் போடணும்.

ஏழை தாய்மார்கள் அண்டா குண்டாவை அடகு வைத்து தாலியை அடகு வைத்து உயர் கல்விக்கு படிக்க விட்டால் அந்த பிள்ளைகளுக்கு செலவுக்கு கையில் பணம் இருக்காது.

அதை தாயுள்ளத்தோடு புரிந்து கொண்ட முதல்வர் அரசு பள்ளியில் படித்த பிள்ளைகள் உயர் கல்விக்கு சென்றால் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளதாகவும் அதன் விளைவால் தமிழ் நாட்டில் உயர் கல்வி படிக்க செல்லும் பெண்கள் 72+சதவீதமாக உயர்ந்துள்ளதாக கூறினார்.